PayPal சேவை விஸ்தரிப்பினால் பெரும் மகிழ்ச்சியில் ஜிமெயில், யூடியூப் பயனாளர்கள்…..

கூகுள் நிறுவனம் தனது கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகளை பயனர்கள் இலகுவாக பெறுவதற்கு Google Pay எனும் சேவையை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.இவ்வாறான நிலையில், இச் சேவையுடன் Paypal சேவையையும் இணைத்து பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி ஜிமெயில் மற்றும் யூடியூப் என்பவற்றில் Paypal ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்த முடியும்.

எனவே, Google Pay கணக்கினைக் கொண்டிராதவர்கள் Paypal கணக்கு ஊடாக ஜிமெயில், யூடியூப் என்பவற்றில் பணம் செலுத்த முடியும்.