பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் தன்னை விட வயதில் குறைந்த 26 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 4 வருடங்களாக டேட்டிங்கில் இருந்த இவர்கள், கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் என இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அங்கிதாவுக்கு26 வயது என்பதால், வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக குறை சொல்கிறார்கள்.
வயது பிரச்சினை இல்லை. எங்கள் காதல் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. உண்மையான காதல்தான் வாழ்க்கை. அது எங்களிடம் இருக்கிறது என தங்களை விமர்சித்தவர்களுக்கு பதில் அளித்தார்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும், ஹவாய் தீவில் தேனிலவு கொண்டாடி வரும் இந்த தம்பதியினர், இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு, புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம் என சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதே தவறு, இதில் தேனிலவு வேறு வேண்டுமா? அதுவும் இந்த புகைப்படங்களை எதற்காக இப்படி தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள் என சமூகவலைதளவாசிகள் விமர்சனம் செய்துள்ளனர்.