கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்தி நடிகைகள்!!: தீபிகா படுகோனேவுக்கு ரூ.13 கோடி…(புதிய சம்பள பட்டியல்)

இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் கோடி கோடியாக வசூல் பார்க்கின்றன. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்த படங்களுக்கு வரவேற்பு உள்ளது. குறைந்த பட்சம் ரூ.100 கோடியும் அதிகபட்சம் ரூ.500, கோடியும் வசூலிக்கிறது.
ஆங்கிலம், சைனீஸ், ஜப்பான், என்று வேற்று மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு பணம் பார்க்கிறார்கள்.
இதனால் நடிகர்கள் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி ரூ.60 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக பணம் சேருவதால் நடிகைகளும் சம்பளத்தை இப்போது உயர்த்தி உள்ளனர்.
அதிக சம்பளம் பெறும் 10 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

இவர் நடித்து எதிர்ப்புகளை தாண்டி ஜனவரியில் வந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடிக்கு மேல் வசூலித்தது.

 201805310109553988_Deepika-Padukone-Rs-13-crore-salary_SECVPF.gif  கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்தி நடிகைகள்!!: தீபிகா படுகோனேவுக்கு ரூ.13 கோடி…(புதிய சம்பள பட்டியல்) 201805310109553988 Deepika Padukone Rs 13 crore salary SECVPF

இதுவரை முதல் இடத்தில் இருந்த கங்கனா ரணாவத் ரூ.12 கோடி வாங்கி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார். குயின் பட வெற்றிக்கு பிறகுதான் இவரது சம்பளம் மளமளவென உயர்ந்தது.

ரூ.12 கோடி செலவில் எடுத்த அந்த படம் ரூ.105 கோடிக்கு மேல் வசூலித்தது. 3-வது இடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா ரூ.12 கோடி வாங்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணத்துக்கு பிறகு படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் ரூ.11 கோடியும் அனுஷ்கா சர்மா ரூ.10 கோடியும் வாங்குகிறார்கள்.

கேத்ரினா கைப், அலியா பட் ஆகியோர் ரூ.9 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை கேட்கிறார்கள்.

வித்யாபாலன் ரூ.9 கோடி வாங்குகிறார். ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக வந்த சோனாக்‌ஷி சின்ஹா ரூ.8 கோடியும் ஷ்ரதா கபூர் ரூ.7 கோடியும் வாங்குகிறார்கள்.