முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது.சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்ததோடு மற்றொருவர் படுகாயங்களுடன், மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாவி அனிஞ்சயன் குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் நளினன் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த சிவலிங்கம் ஜெனகன் (வயது -20) என்ற இளைஞனே தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிச் செல்லும் பாதையில் உந்துருளியில் பயணித்த போது, வீதியோரத்தில் காணப்பட்ட மதகுடன் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.