யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு!

புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை காலை 8.30 மணிமுதல் மாலை ஐந்து மணி வரையில் யாழ். மாவட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலணையின் ஒரு பகுதி, மண்கும்பான், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்டைதீவு இலங்கை கடற்படை முகாம், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், சோளாவத்தை ஆகிய பகுதியில் மின் தடைப்பட்டிருக்கும்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின், அறிவியல் நகர், யுனிச்செலா, பொறியியல் பீடம், விவசாய பீடம், Mas Active, Farm House, North Cargill’s Agri Foods ஆகிய பகுதிகளில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலும், மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தின் சிதம்பரபுரம், கற்குளம், ஆசிக்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், கூமரசங்குளம், குடாகச்ச கொடிய, குடாகச்ச கொடிய கல் உடைக்கும் ஆலை, மகா மயிலங்குளம், துட்டுவாகை பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இந்த பகுதியிலும் காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணி வரைக்கு மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.