ஒன்றரை இலட்சம் பசுக்களை கொல்ல நியூஸிலாந்து அரசாங்கம் தீர்மானம்

மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பக்றீரியா தோற்றுநோயை தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களை கொல்வதற்கு நியூஸிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பக்றீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்த பக்றீரியாவால் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் இருந்தபோதிலும் நியூஸிலிந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை இது பாதிக்கும் என்பதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பக்றீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளிலுள் உள்ள பசுக்களை அழிக்கவே நியூஸிலாந்து அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இது மிகவும் கடினமான முடிவென்றாலும் நியூஸிலாந்து நாட்டின் கால்நடை வளம் மற்றும் 20 ஆயிரம் பால் பண்ணைகள் போன்றவற்றை பாதுகாக்கும் முகமாகவே இதனை செய்ய வேண்டியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.