தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Huawei, மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் Huawei Lanka Carrier Congress 2018 (Huawei Carrier Congress 2018) என்ற தொழில் மாநாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தனது பங்காளர்கள் மீது Huaweiகொண்டுள்ள தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சூழல்தொகுதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற அதன் ஆவல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ‘Roads to a better future’ (சிறப்பான எதிர்காலத்திற்கான வழித்தடங்கள்) என்பதே இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக அமையப்பெற்றது. முன்னணி பங்காளர்கள் மத்தியிலிருந்து சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தொலைதொடர்பாடல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரான கௌரவ ஹரின் பெர்னாண்டோவும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வில் 5 5G, All-Cloud வலையமைப்பு, வீடியோ மற்றும் IoT ஆகியவற்றிற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை Huawei முன்வைத்ததுடன் தொழிற்துறை முன்னோடிகளுடன் இடைத்தொடர்பாடல்களை ஏற்படுத்தி, தனது அனுபவம் மற்றும் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டதுடன், முன்னிலை வகிக்கும் உற்பத்திகள் மற்றும் சூழ்நிலை சார்ந்த தீர்வுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. ஆற்றல்கள், இணைப்புக்கள், வர்த்தக முறைமைகள்ரூபவ்
அனுபவம் மற்றும் பங்குடமைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தற்போதைய வரையறை எல்லைகளுக்கும் அப்பால் செல்லும் திறன் கொண்டவையாக காவிகள் (carriers)காணப்படுவதால், 23 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிமிக்க டிஜிட்டல் வளர்ச்சி மாற்றச் சந்தையின் அத்திவாரமாக இன்றைய டிஜிட்டல் உலகில் அவை மாற்றம் கண்டுள்ளன.
Lanka Carrier Congress 2018 நிகழ்வில் உரையாற்றிய தொலைதொடர்பாடல்கள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ அவர்கள், “இலங்கைக்கு மிகச் சிறந்தது எதுவென்பதை இனங்கண்டுரூபவ் கற்று, உள்நாட்டு தொழிற்பாட்டாளர்கள் தமது எதிர்கால பாதையை தீரமானிப்பதற்கு வழிகாட்டுவதுடன் தொழில்வாய்ப்பு சார்ந்த நிறுவனங்கள் ஒன்றுதிரண்டு, தமது தொழில்நுட்பங்களை பகிர்ந்து, வெளிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் வழிகோலும் ஒரு மேடையாக Lanka Carrier Congress forum மாநாடு திகழும் என நம்புகின்றேன். நிலையான மற்றும் மொபைல் வலையமைப்புக்களின் மூலமாக இணையத்தை அடைந்துகொள்வது வெகுவிரைவில் ஒரு அடிப்படை உரிமையாக மாறவுள்ளதுடன் இலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே மொபைல் தொலைதொடர்பாடலின் அடைவுமட்டமானது 130% இனையும் தாண்டியுள்ள நிலையில், தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களைப் பொறுத்தவரையில் கணிசமான வாய்ப்புக்களை அது வழங்குகின்றது. வளர்ச்சி கண்டு வருகின்ற சந்தைகளில், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைதொடர்பாடல் வலையமைப்பினுள் உள்வாங்கப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதன் விளைவாக பரிவர்த்தனையும் ஐந்து முதல் பத்து மடங்கினால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 3G மற்றும் 4G தொலைதொடர்பாடல் உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல்களின் மகத்தான வளர்ச்சியை முதன்முதலாக அனுபவித்துள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று வளர்ச்சி கண்டுள்ளதுடன், இன்னும் வலுவான மற்றும் உயர் வேகங்களுடனும் அடுத்த தலைமுறை கம்பியில்லா இணைப்பிற்கு வழிகோலும் வகையில் எமது தொழிநுட்பத்தை நாம் தற்போது 5G இற்கு வளர்ச்சி மாற்றம் செய்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,
“இலங்கையில் உள்ள மிக முக்கியமான தொழிற்துறைப் பங்காளர்களை ஒன்றுதிரட்டி, புதிய வாய்ப்புக்கள், வர்த்தகங்கள், சேவைகள் மற்றும் பிரயோகங்கள் (applications) ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் ஆரோக்கியமான ஒரு சூழல்தொகுதியை உருவாக்கும் தமது முயற்சியில் முன்னணி தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள், தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்பினரையும் இணைப்பதால் Lanka Carrier Congress 2018 நிகழ்வானது Huawei இனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்துடன், தொழிற்துறையில் புதியதொரு சூழலைத் தோற்றுவித்து, அனைத்து மக்கள், வீடுகள் மற்றும் ஸ்தாபனங்கள் அறிவார்ந்த உலகில் முழுமையாக இணைக்கப்பட்டவர்களாக மாறுவதற்கு டிஜிட்டலை அறிமுகப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்கின்ற நிலையில், தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்கள் மற்றும் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற புதிய புத்தாக்கங்களை கொண்டுவரும் முயற்சிகள் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.