சீனாவே ஆசியாவின் நீண்ட கால ஆபத்து – அமெரிக்க தளபதி கருத்து

பசுவிக் பிராந்தியத்தின் அமைதிக்கான உடனடி ஆபத்தாக வடகொரியாவே உள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்காவின் பசுவிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரீஸ் அதேவேளை சீனாவின் மேலாதிக்க கனவு அமெரிக்காவிற்கு பெரும்சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பசுவிக் கட்டளை பீட தலைமையிலிருந்து விலகி தென்கொரியாவிற்கான தூதுவராக பதவியேற்க உள்ள நிலையிலேயே ஹரீஸ் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவே உடனடி அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஹரீஸ் அமெரிக்கா வரை வரக்கூடிய அணுவாயுத ஏவுகணைகளை கொண்டுள்ள வடகொரியாவை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தொடர்ந்தும் எங்கள் நீண்ட கால சவாலாக விளங்குகின்றது அமெரிக்காவும் அதன் சகாக்களும் உரிய கவனம் செலுத்தாமல் ஈடுபாடு காட்டாமல் இருந்தால் சீனாவின் ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்தும்கனவு  சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா ரஸ்யா குறித்து எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ பசுவிக் பிராந்தியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ரஸ்யா ஈடுபடலாம் எனவும் அவர் குறிப்;பிட்டுள்ளார்.