கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஆமர் வீதி, ஜயத்தவன விகாரைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,விபத்தில் பலியான பெண் உடல் சிதைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பலியானவர் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.