உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந் நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் பல்வேறு திட்டங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பொருளாதாரம், கலாசார உறவுகள், உலக நாடுகளில் நடக்கும் முக்கிய சம்பவங்கள், பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள கும்பமேளா திருவிழாவை இந்தோனேஷியாவைச் சேர்ந்தோர் பங்கு கொள்வதற்காக அவர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார்.
இச் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களுக்கிடையே, ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், ரயில்வே உள்ளிட்ட 15 துறைகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.