சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் தெரிலித்தார்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவரது கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் கோபத்துடன் பதிலிளித்துள்ளார். அத்தோடு கடும் கோபத்தோடு ‘ஏ‘என ஒருமையில் கத்தியபடி, வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என செய்தியாளர்களை மிரட்டியதோ செய்தியாளர்கள் சந்திப்பை இடையிலேயே நிறுத்தக்கொண்டு சென்றுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த செயட்பாடு ஊடகவியலாளர்களை மிரட்டும் தொனியில் உள்ளதென சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி
இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது