ஆறு மாத காலப்பகுதிக்குல் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவர் என நேபாள பிரதமர் காட்கா பிரசாத் ஓலி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள காட்கா பிரசாத் ஓலி அந்த நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் எனவும் அனைத்து செயற்பாடுகளும். கணினிமயமாக்கப்படும் என குறிப்பி்ட்டிருந்தார்.
எனவே அமைச்சர்கள் அனைவரும் அவர்களது உதவியாளர்களிடம் மடிக்கணினியை இயக்க கற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்,
அவ்வாறு 6 மாதங்களுக்குள் அமைச்சர்கள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என காட்கா பிரசாத் ஓலி அறிவித்துள்ளார்.