கொல்லப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்

உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார்  என கருதப்பட்ட ரஸ்ய ஊடகவியலாளர் அர்கடி பப்சென்கோ செய்தியாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்துவிட்டது என குற்றம்சாட்டப்பட்டள்ள நிலையில் அவர் இன்று உக்ரைன் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

தன்னை கொல்வதற்கான சதி குறித்து ஒரு மாதத்திற்கு முன்னர் தனக்கு தகவல் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய பாதுகாப்பு படைகளே கொலைக்கான உத்தரவை பிறப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த கரகோசத்திற்கு மத்தியில் செய்தியாளர் மாநாடு இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஊடகவியலாளர் தனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொலை நாடகதிற்கு தானே காரணம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளரை கொலை செய்ய முயல்பவர்களை கைதுசெய்வதற்காகவே இந்த நாடகத்தை ஆடியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.