மீனவர்களினதும் மலையக மக்களினதும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விலையை குறைத்து பழைய விலையில் விநியோகம் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தின் போதே இது தொடர்பான யோசனையை மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வேதஆராச்சி நிதி அமைச்சரின் செயற்குழுவில் சமர்ப்பித்தார்.
இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் திலிப் வேதஆராச்சி குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களுக்கு மண்ணெண்ணெய் விலையை குறைத்து சலுகை வழங்குவதற்கும் நாட்டில் மண்ணெண்ணெய் விற்பனை தளங்கள் பல நிர்மாணிக்கும் யோசனையை நான் முன்வைத்தேன். இதற்கு செயற்குழுவில் பூரண அங்கீகாரம் கிடைக்கபெற்றது.
இதன்படி நாளை நிதி அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.