உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 13 தமிழர்களின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று வியாழக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கு பல்.கலையின் வந்தாறுமூலை வாளாக கலைப்பிரிவு ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.