ரிவித்துள்ள சரத்பொன்சேகா இலங்கையில் மாத்திரம் அல்ல உலகின் வேறு பகுதிகளிலும் இந்த நடைமுறை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நான் திறைசேரி பிணைமுறி மோசடி மூலம் பணம் பெற்றுக்கொண்டேன் என எவரும் தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா வர்த்தகர்களிடம் இருந்து பெறும் பணத்தை நாங்கள் சிறிய தேவைகளிற்கு பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்பிரச்சார நடவடிக்கைகளிற்கு தேவைப்படும் போது நாங்கள் பணம் பெறுவது வழமை இது இலஞ்சம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து 2005 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஐந்து இலட்சம் வழங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பணம் வழங்குபவர்கள் சில நன்மைகளை எதிர்பார்ப்பது வழமை ஆனால் நன்மைகளை பெறுவதற்காக சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபடுபவன் நான் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.