தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர், ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது இளைய மகள் ராதிகா (வயது 22). இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடிவந்தனர். அண்ணாதுரை என்பவர் கடந்த ஜனவரி மாதம் திருமணத்திற்கு ராதிகாவை பெண் பார்க்க வந்தார்.
பெண் பார்த்துவிட்டு சென்ற பிறகு திருமணம் விஷயமாக ராதிகாவின் அக்கா ஸ்வேதாவுடன் (26) அண்ணாதுரை அடிக்கடி தொலைபேசியில் பேசினார்.
ஸ்வேதாவுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஸ்வேதாவுடன் அண்ணாதுரை அடிக்கடி பேசியதில் அவர்களுக்குள் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஸ்வேதா வீட்டிலிருந்த 5 பவுன் தங்கநகை மற்றும் ரூ.2 லட்சத்துடன் தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். மயிலாப்பூர் லஸ்கார்னர் அருகே தயாராக காத்திருந்த அண்ணாதுரையுடன் அவர் ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதுபற்றி ராதிகா மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா? அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு அண்ணாதுரை அந்த பெண்ணை கூட்டிச் சென்றாரா? என்ற கோணத்தில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.