கனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் லிபரல் கட்சியில் [Liberal Party ] போட்டியிடும் சுமி சண் [Sumi Shan], இவர் புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சமூக சேவையில் பெரும் ஆர்வம் கொண்ட சண்முகநாதன், கனகாம்பிகையின் [ஆசிரியர் ] மகள்.
இவர் ஒரு தமிழ் பெண்மணி. இவர் அரசியலில் பட்டப்படிப்பினை முடித்தவர்.
இத்துறையில் 20 வருட அனுபவம் உடையவர். அத்துடன் ஒன்ராரியோ அரசில் சிரேஷ்ட மந்திரிகளுக்கு ஆலோசகராகவும் Heart&Storke Foundation and Microsoft நிறுவனத்தில் முகாமையாளராக வேலை செய்த அனுபவம் உடையவர் .
ஈழத்திலும் தன்னுடைய Infinite என்னும் நிறுவனம் மூலம் வட மாகாண முதல்வர் அனுமதியுடன் சுற்றுசூழல் நீர் என்பனவற்றை துப்பரவாக்கும் பணியை யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கும் இவர், கனடாவிலும் தன் பணியை ஸ்காபுறோ ரூச் பார்க் [Scar Borough -Rouge Park ] தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு இப்பகுதி மக்களுக்கும் தான் சார்ந்த கட்சியின் மூலம் சேவை செய்ய விரும்பி போட்டியிடும் இவரை ஆதரித்து வெற்றியீடுட்டச் செய்யுமாறு கனடா Scar Borough-Rouge Parkவாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறோம்