இளவரசர் மொகமத் பின் சல்மான் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கடந்த வாரம் வெளியாகியிருந்த நிலையில், அவர் தொடர்பான வீடியோவை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.
சவுதிஅரேபியாவின் பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் கடந்த 21-ஆம் திகதிக்கு பின் எந்த ஒரு பொதுநிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லை எனவும், இதனால் அரச குடும்பத்தில் அவருக்கு எதிரானவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற செய்தி வேகமாக பரவியது.
سمو #ولي_العهد الأمير #محمد_بن_سلمان والرئيس اليمني #هادي يبحثان المستجدات والتطورات على الساحة اليمنية والجهود المبذولة تجاهها، بالإضافة إلى الأعمال الإغاثية الإنسانية والتنموية للشعب اليمني الشقيق. pic.twitter.com/5aNBaVIoyG
— بدر العساكر B.Asaker (@Badermasaker) May 30, 2018
அதுமட்டுமின்றி இளவரசருக்கு எதிரானவர்கள் அரண்மனை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அதில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் ஊடகம் தெரிவித்திருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இளவரசர் குடும்பம் அவர் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருந்தது, ஆனால் சிலர் அதை நம்பவில்லை.
இந்நிலையில் இளவரசர் சல்மான் ஏமன் நாட்டு ஜனாதிபதி Abdrabbo Mansour Hadi-ஐ கடந்த புதன் கிழமை சவுதி அரேபியாவின் Jeddah-ல் வரவேற்றார்.
அப்போது இருவரும் ஏமன் நாட்டில் நிலவும் நெருக்கடி குறித்து பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளதால், அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வதந்திக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.