ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞனால் அந்நாட்டு உறவினர்கள், நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர்.கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சின்தன தனஞ்ய என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இத்தாலியில் இரு நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை இளைஞனின் இறுதி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.இத்தாலி, கத்தானியா நகரத்தில் இந்த அஞ்சலி நடவடிக்கைகள் இடம்பெற்றது.தொழிலுக்காக இத்தாலி சென்ற இந்த இளைஞர், இத்தாலியில் தனது பெற்றோருடனே வாழ்ந்து வந்துள்ளார்.இறுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்த குறித்த இளைஞர், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை நண்பரின் தந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரப் பணியை நிறைவு செய்துவிட்டு, வைத்தியசாலை சென்று நண்பரின் தந்தையை பார்த்துள்ளார். அங்கிருந்து வீடு செல்லும் போதே இந்த விபத்திற்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் பலர் இளைஞனின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில், நேற்றைய தினம் அனைவரதும் கண்ணீருக்கு மத்தியில் சின்தன தனஞ்யவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.