சென்னை அணிவென்ற ஐ.பி.எல். கிண்ணத்துக்கு சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.கடந்த திங்கட்கிழமை மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை விமான நிலையம் வெந்தனர். அப்போது சென்னை அடையாறிலுள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கி தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந் நிலையில் தி.நகர்-வெங்கட நாராயண சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஐ.பி.எல்.வெற்றிக் கிண்ம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு கிண்ணத்துக்கு துளசி மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.