களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கணவனுக்கு கொண்டு வந்த ரொட்டியை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் நபர் ஒருவரின் மனைவி அவரை பார்க்க சென்றுள்ளனர்.
கணவரை பார்க்க சென்ற மனைவி கணவருக்காக ரொட்டி கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கணவருக்காக கொண்டு சென்ற ரொட்டியை சோதனையிட்ட போது அதில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட புகையிலை மீட்கப்பட்டுள்ளது.
புகையிலை மறைத்த குற்றச்சாட்டில் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 15 புகையிலை பக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பிணி என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.