ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்ப நாய் பிரிவில் இருந்த கோரா என்ற நாய் நேற்று உயிரிழந்தது.
பொலிஸ் மரியாதையுடன் இன்று கோராவின் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.
இதேவேளை, கோரா புற்று நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பிரிவுதகவல் வெளியிட்டுள்ளன.
08 வயதினைக் கொண்ட கோரா மோப்ப நாய் கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்து வந்துள்ளது.
சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போதுசட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை இனங்கண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தது.
இந்த கோரா என்ற பொலிஸ் மோப்ப நாய் மத்திய மாகாணத்தில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பயிற்சி ஒன்றிற்காக அழைத்து சென்ற போதே உயிரிழந்துள்ளது.
இதேவேளை, இந்த மோப்ப நாய் அம்பாறை, மட்டக்களப்பு, பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவை புரிந்து இறுதியாக ஹட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.