ரணிலிடம் யாழ். மேயர் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடி தீர்வு!

1980களில் எரியூட்டப்பட்ட யாழ். மாநகர சபை கட்டடத்தை புனரமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான தீர்வு கிட்டியுள்ளதென, யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

குறித்த கட்டட புனரமைப்பிற்கு 1800 மில்லியன் ரூபாய் அவசியமாக உள்ள நிலையில், பிரதமரின் யாழ். விஜயத்தின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் 1000 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கத் தயாராக இருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நேற்று (புதன்கிழமை) காலை தெரிவித்ததாக மேயர் குறிப்பிட்டார்.

அத்தோடு, கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதனையண்டிய பகுதியில் வீடுகளை கட்டிக்கொடுத்தல், யாழ். நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பிரதமரிடம் கலந்துரையாடியதாகவும் யாழ். மேயர் எமது ஆதவனுக்கு தெரிவித்தார்.