அவள் கன்னித்தன்மை இல்லாதவள்: துண்டு துண்டாக வெட்டி உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்

தய்வான் நாட்டில் தனது காதலி கன்னித்தன்மை இல்லாதவள் என்பதை அறிந்த காதலன் அவளை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

Gary Chu – Huang ஆகிய இருவருக்கும் Tinder என்ற ஆப்ஸ் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது, ஆரம்பத்தில் நெருங்கி பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.

Gary தனது காதலி மீது அதிக அன்பு செலுத்திவந்தார். இந்நிலையில் தான் தனது காதலி இதற்கு முன் வேறு ஒரு நபரை காதலித்து அவருடன் நெருக்கமாக பழகியது தெரியவந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட Gary, இதுகுறித்து தனது காதிலியுடன் சண்டைபோட்டுள்ளார்.

தனது காதலி கன்னித்தன்மை இல்லாதவள் என்பதை இவரால் தாங்கிகொள்ள முடியவில்லை. இதனால் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை ஒரு பையில் போட்டு கட்டி வைத்துள்ளார்.

பின்னர், மிகுந்த மன உளைச்சலில் இந்த Gary, தனது முகநூல் பக்கத்தில், யாரும் காதல் என்ற பெயரில் யாரையும் ஏமாற்றதீர்கள், இதனால் மனிதனின் மனம் அதிகம் புண்படுகிறது என காதல் தொடர்பான கருத்துக்களையே பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இறந்துபோன அப்பெண்ணின் சகோதரர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து பொலிசார் விசாரணை நடத்தினர். இதில் அப்பெண், கடைசியாக Gary- வுடன் ரயில் நிலையத்தில் சென்ற சிசிடிவி காட்சி பொலிசிற்கு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த Gary தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.