வேல் முருகனுக்காக தீ குளித்தவர் மரணம்!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந் நிலையில் சுங்கச் சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வேல்முருகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு எதிர் வரும் 4ஆம் திகதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியின் பிரமுகர் ஜெகன் என்பவர் தீக்குளித்தார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகன் சிகிச்சை பலனின்றி  இன்று காலை உயிரிழந்துள்ளார்.