இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக, தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மிகவும் அரிய வகையான சுறாமீன்களின் இறகுகளும், மறைக்கப்பட்டு விமானத்தின் ஊடாக ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தடைக்கு மத்தியிலும், ஹொங்கொங்கில் சுறாமீன்களின் இறகுகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மாத ஆரம்பத்தில் மாத்திரம் 989 கிலோ கிராம் எடைகொண்ட சுறாமீன்களின் இறகுகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூரின் ஊடாக ஹொங்கொங்கிற்கு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.