வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் ,லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தியா சென்று திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இடையே பேஸ் புக் மூலம் பழக்கம் இருந்துள்ளது. கணவர் லண்டன் சென்று, மனைவிக்கு விசா எடுப்பதாக கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இதேவேளை இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் கணவன் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது தெரியவந்ததன் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக குறித்த யுவதி கணவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதன்போது கணவன் தனது குழந்தையை தருமாறு மிரட்டியதுடன், குழந்தையை கடத்துவேன் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலையில் தாயாருடன் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்பட்டோர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
குழந்தை கடத்தப்பட்டு சிறிது நேரத்தில் லண்டனில் உள்ள கணவன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கணவனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டவர் ஆவார். இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிக்குவாரா லண்டன் மன்மதன் ? இது தொடர்பாக உங்களுக்கு தகவல் ஏதாவது தெரிந்தால் கீழ் காணும் மின் அஞ்சல் ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.