பாரம்பரியம் என்ற பெயரில் நிர்வாணமாக நின்று பாடல் பாடிய மாணவிகள்….!!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஹோசா இன பள்ளி மாணவிகள் பாரம்பரியம் என்ற பெயரில் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.அதுவும், உடல் உறுப்புகள் தெரியும் வகையில் முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு இவர்கள் பாடிய பாடல் வீடியோ இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் முகம் சுழித்துள்ளனர். மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது அவமானமாக இருக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.