முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று இரவு அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.