இன்றைய ராசிபலன் (02/06/2018)

  • மேஷம்

    மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல் படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மதியம் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ் வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீ ர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.

  • தனுசு

    தனுசு: மதியம் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: மதியம் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • மீனம்

    மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.