சருமத்திற்கு மெருகேற்றும் சிவப்பு சந்தனம்!

சந்தனம் ஆயுர்வேத ,சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. வாசனைத்திரவியங்களில் ஒன்றாக விளங்கும் சந்தனம் நாம் அறிந்ததே.

பண்டைய காலத்தில் சாலமன் அரசர் ராணி ஷீபாவிற்க்கு வடிவாக வெட்டப்பட்ட சிவப்பு சந்தன மரக் கட்டைகளை பரிசளித்தாராம் .உயர் தர மரச்சாமான்கள் ,ஆபரணங்கள் ,சதுரங்க காய்கள் செய்ய என மேல்குடி மக்களின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஆடம்பர பொருட்களில் ஒன்றாக உள்ளதாலே உலகெங்கும் இதற்க்கு தேவை நீடிக்கிறது.

Benefits of Red Sandalwood Powder

சிவப்பு சந்தன மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளர்கிறது. இந்தியாவில் மற்றும் நேபாளத்தில் அதிகம் வளர்கிறது.சிவப்பு சந்தனம் இதன் அழகு மற்றும் மருத்துவ குணங்களால் உலகெங்கும் இதன் தேவை அதிகம்.

சிவப்பு சந்தனதூள் அனைத்து ஆயுர்வேத , சித்த மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

மருத்துவ குணங்கள்

சந்தனம் வெப்பமும் குளிர்ச்சியும் உடையது…இதை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகம், மனமகிழ்ச்சி, இலட்சுமி விலாசம், சருமத்தாது ஒளி, பெண்களிடம் விருப்பம் உண்டாகும்…சீழ் பிரமியம் போகும்.

மேலும் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களையும், சித்தப்பிரமை, ரூட்சை, ஒழுக்குப்பிரமேகம், நாவறட்சி, உட்சூடு, நமைச்சல் இவைகளையும் போக்கி, உடம்பிற்கு வலுவைக் கொடுக்கும்.

Red Sandalwood Powder

சிறுநீர் பெருக்கியாகவும் ,இரத்த சுத்திகரிப்பி ,செரிமான கோளாறுகள் நீங்க ஆங்கில மருத்துவத்தில் பயன்படுகிறது .

இதைக்கொண்டு முகப்பூச்சுப்பொடி,குளிக்க சவர்க்காரம்,சந்தனாதித் தைலம், பஞ்சகற்பம், மனோமகுட தூபப்பொடி,சந்தன எண்ணெய் போன்ற அநேக உபப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு சந்தனம் சேர்த்த முகப்பூச்சுகள் (face pack)

1.உலர்வகை சருமத்திற்கு (Dry Skin)

ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன் அதே அளவு காய்ச்சாத பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து பூசும் போது தோல் பளிச்சிடும், வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும்.வறண்ட தோல் மென்மையாகும்.

2.எண்ணெய் சருமம் (Oily Skin)

ஒரு ஸ்பூன் அளவு சிவப்பு சந்தனத்தூளுடன் அதே அளவு கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இவற்றுடன் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு இறந்த செல்களை நீக்கவும், எண்ணெய் சருமத்தில் முகப்பருக்கள் நிறைய தோன்றும் எனவே மஞ்சள் சேர்ப்பதால் முகப்பரு நோய்த்தொற்று ஏற்பட்டு புண்கள் ஆகாமலும் , நாளடைவில் முகப்பரு வடுக்கள் நீங்கவும் உதவிப்புரிகிறது.

3. தேங்காய் எண்ணெயில் சிவப்பு சந்தனதூள் கலந்து முகத்தில் தடவி கழுவவும். தோலின் செல்களுக்கு தேவையான ஊட்டம் தரும்.சருமம் இளமையாக இருக்கும்.

Benefits of Red Sandalwood

4. எலுமிச்சை சாறு மற்றும் சிவப்பு சந்தனதூள் கலந்து முகத்தில் பூசும் போது , முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் ஆன ஸெபேஸியஸ் (sebaceous glands) சுரப்பை ஒழுங்கு படுத்தும்.இதனால் முகப்பரு தோன்றுவது குறைகிறது.

5. கோடை வெயிலில் கறுத்த சருமத்தில் வெள்ளரி ச்சாறு அல்லது தயிருடன் சிவப்பு சந்தனதூள் கலந்து பூசி வந்தால் கருமை குறைந்து தோல் பொலிவு பெறும்.