ரோஸ் வாட்டர் எனும் பன்னீரின் நறுமணத்தை எல்லோரும் விரும்புவார்கள்.ரோஜா இதழ்களில் இருந்து நறுமணம் வீசும் சென்ட்டை வாலை வடித்தல் முறையில் பிரித்து எடுத்து நீரில் கரைத்த ஏரோசால் கலவை தான் ரோஸ் வாட்டர்.
எகிப்திய யவன ராணி கிளியோபாட்ராவின் (Cleopatra) அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது ரோஸ் வாட்டர் தான்.சருமபராமரிப்புக்கும் , சமையலுக்கும் என இந்திய வீடுகளில் அதன் நறுமணத்திற்க்காகவே முக்கிய இடம்பெற்றுள்ளது.
ரோஸ் வாட்டரின் வரலாறு
பண்டைய கால பெர்ஷியா ( ஈரான்) தான் ரோஸ்வாட்டரின் தாயகம்.ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை ஸ்டீம் டிஸ்டிலேஷன் முறையில் வடித்து எடுக்கின்றனர்.அத்தர் எனப்படும் ரோஸ் ஆயிலும் உலகப்புகழ் பெற்றது.இங்கிருந்து தான் கிரேக்க , ரோமானிய நாடுகளுக்கு ரோஸ் வாட்டர் புகழ் பரவியது.
சமையலில் ரோஸ் வாட்டர்
அதிஅற்புதமான ரோஸ் வாட்டரின் நறுமணத்திற்க்காகவே பெர்ஷியாவின் இனிப்புகளில், சர்பத்களில் பயன்படுத்தப்பட்டது.இது மெல்ல மெல்ல உலக அளவில் பரவி ஐஸ்கிரீம், யோகர்ட், குக்கிஸ்.. பால் போன்ற பல்வேறு இனிப்புகளில் பயன்படுத்தப்பட்டது.
ஆடம்பர சின்னம்
மத்திய ஐரோப்பாவில் ராஜ உபச்சார விருந்தில், விருந்தினர்கள் கைகழுவ ரோஸ் வாட்டர் நிரம்பிய கிண்ணங்கள் இருக்குமாம்.அரசர்கள், செல்வந்தர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் அத்தரை உடைகளில் தெளித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். காதல், அன்பின் நினைவு சின்னமாக ரோஸ் ஆயில் அதாவது அத்தரை வழங்கியுள்ளனர்.
மதச்சடங்குகளில் ரோஸ் வாட்டர்
இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் பார்சிகளின் சமயச் சடங்குகளில் ரோஸ் வாட்டர் பிரதான இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட சமயங்களை சேர்ந்தவர்கள் மரணிக்கும் போது இறுதிச்சடங்கில் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. குழந்தையின் பேபி ஆயிலில் ரோஸ் ஆயில் இருக்கும். மறைமுகமாக மனிதனின் இறப்பு முதல் பிறப்பு வரை ரோஸ் வாட்டர் இடம்பெறுவது ஆச்சரியம் தான்.
சருமப் பராமரிப்புக்கு ரோஸ் வாட்டர்
1. தோலின் pH சமன்படுத்துகிறதோடு தோலில் சுரக்கும் எண்ணெய் சுரப்பிகளை ஒழுங்கு படுத்தி எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
2. ரோஸ் வாட்டரானது தோல் அரிப்பு, எக்ஸிமா, சிவந்த புண்களுக்கு தடவும் போது நல்ல பலன் அளிக்கிறது.
3. முகப்பூச்சு க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள், சேவிங் க்ரீம்களில் இதன் நறுமணத்திற்க்காக சேர்க்கின்றனர்.
4. முகத்தில் உள்ள வெயிலின் தாக்கத்தால் விளைந்த கருமையை நீக்குகிறது.சருமதுளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்துக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.
5. முகத்தில் உள்ள வெயிலின் தாக்கத்தால் விளைந்த கருமையை நீக்குகிறது.சருமதுளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்துக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.
6. மலர் மருத்துவத்தில் ரோஸ் ஆயில் இல்லாமலா? புத்துணர்வும், ஆழ்ந்த உறக்கத்திற்க்காகவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது.
தரமான 100% தூய்மையான ஆர்கானிக் ரோஸ் வாட்டராக வாங்கி பயன்படுத்தவும்.