இப்பொழுதெல்லாம், முடி கொட்டுகிற பிரச்சனை என்பது மிகவும் சாதாரணமாக காணப்படுகிறது. இதில், பலர் அக்கறை எடுக்காமல் விடுவதால் முடி உதிர்வு மிக அதிகமாகி அது வழுக்கைத்தலை வரைக்கும் இட்டுச்சென்றுவிடும். இந்த முடிகொட்டும் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? கைவசம், பல வீடு வைத்தியங்கள் இருந்தாலும், நமக்கென்னவோ கடையில் விற்கும் ஷாம்பு அல்லது என்னை வாங்கி, பின்பு ரிசல்ட் இல்லை என்ற பின்புதான் நம்ம ஊர் வைத்தியத்திற்கு வருவோம்.
சரி, முடி கொட்டுகிற பிரச்சனை இருந்தாலோ அல்லது மீண்டும் முடிவளரவேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, இந்த வீட்டுவைத்தியதை முயற்சி செய்து பாருங்கள். செலவு ஒன்றும் பெரியதாக இல்லை. இதற்க்கு தேவையான பொருட்கள் மூன்றுதான்; வெள்ளைப்பூண்டு, விளக்கெண்ணெய் மற்றும் தேங்காயெண்ணை.
பூண்டின் சாறு பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பூண்டை வைத்து நல்லதோர் கூந்தல் தைலம் தயாரிக்கலாம். பூண்டின் இயற்கை தன்மை, தலைமுடியின் மயிர்கால்களை நன்கு சுத்தம்செய்ய கூடியது. தலையில் உள்ள, பொடுகு, புஞ்சை போன்றவற்றை முற்றிலுமாக நீக்கும் வல்லமை கொண்டது. அதோடு மயிர் வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
இந்த கூந்தல் தைலத்தை தயாரிக்க கால் கப் அளவு விளக்கெண்ணையும், சம அளவு தேங்காயெண்ணையும் எடுத்துக்கொள்ளவும்.
முடிந்தவரை இந்த இரண்டு எண்ணெய்களையும், சுத்தமான செக்கில் ஆடிய எண்ணையாக பார்த்து வாங்குவது நல்லது.
செய்முறை: கைப்பிடியளவு பூண்டை தோல் உரித்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பூண்டுகளை, சீவல் கொண்டு சீவி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யப்போகும் இந்த கூந்தல் தைலத்தை கண்ணாடி பாட்டிலில்தான் சேமித்து வைக்கவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு பயன்படுத்திவந்தால், இந்த தைலத்தின் பல இயற்கைத் தன்மைகள் மாறுபட்டுவிடவும் வாய்ப்புகள் உள்ளன.
எடுத்துக்கொண்ட கண்ணாடி பாட்டிலில், சீவி வாய்த்த பூண்டு விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன், சுத்தமான விளக்கெண்ணையை சேர்த்துக்கொள்ளவும். விளக்கெண்ணெய், இயற்கையாகவே குளிர்ச்சித்தன்மை உடையது. இதோடு, சம அளவிற்கு தேங்காய் எண்ணையை சேர்த்துக்கொள்ளவும். தேங்காய் என்னை, கொஞ்சம் சூட்டுத்தன்மை கொண்டது. இதனால், உங்களுக்கு குளிச்சியான உடம்பாக இருந்தாலும் அல்லது சூட்டு உடம்பாக இருந்தாலும் இந்த கூந்தல் தைலம் உங்கள் உடற்சூட்டிற்கு ஏற்றாற்போல் செயல்படும்.
தற்போது, இந்த பாட்டிலில் சேர்த்துள்ள பூண்டு விழுது, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த மூன்று கலவையையும் நன்றாக கலக்கி விடுங்கள். இந்த எண்ணையை கலக்குவதற்கு எந்த பிளாஸ்டிக் ஸ்பூன் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அதற்க்கு பதில், மர கரண்டியோ அல்லது சில்வர் கரண்டியோ பயன்படுத்தி நன்றாக கலக்கி விடவும்.
பின்னர், இந்த கலவை காந்த கண்ணாடி பாட்டிலை நல்ல மிதமான வெய்யிலில் ஒரு ஏழு முதல் எட்டு நாட்கள் வரை வைக்க வேண்டும். நன்றாக சூரிய ஒளி படுவதினால், பூண்டின் சாறு எல்லாம் நன்றாக எண்ணெய் கலவையினுள் இறங்கி ஒரு நல்ல இயற்கையான குணமுள்ள ஒரு சிறந்த கூந்தல் தைலத்தை உங்களுக்கு தரும்.
இதை கண்டிப்பாக வெயிலில் வைத்துதான் சூடுப்பன்ன வேண்டும். அடுப்பின் சூட்டில் இதை காய்ச்சினால், பூண்டு மற்றும் எண்ணெய்களில் உள்ள நல் கொழுப்பானது கரைந்து அதன் தன்மையும் மாறிவிடும்.
ஏழு எட்டு நாட்களுக்கு பிறகு இந்த எண்ணையை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். வாரம் ஒருமுறையோ அல்லது உங்கள் தேவைக்கேற்றாற்போல் இந்த எண்ணையை நீங்கள் பயன்படுத்தலாம். இதை தடவி குளிக்கும்போது, லேசான சீயக்காய்த்தூள் அல்லது மிகவும் இலகுவான ஷாம்பு கொண்டு முடியை அலசுவது நல்லது.