கோட்டையில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவரை பேருந்து நடத்துனர் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஓடி வந்த நபர் ஒருவர் அலுவலத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும் என நோக்கத்தில் ஓடி வந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
மிகவும் சிரமத்துடன் பேருந்துக்குள் நுழைந்து கொண்ட பயணியிடம் டிக்கட் பெற்றுக் கொள்ளுமாறு நடத்துனர் கூறியுள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து கொள்ளுபிட்டிக்கு செல்ல டிக்கட் ஒன்றை வழங்குமாறு 12 ரூபா பணத்தை நடத்துனரிடம் வழங்கியுள்ளார். எனினும் அதற்கான உரிய கட்டணம் 13 ரூபாவாகும்.
இதனால் கோபமடைந்த நடத்துனர் ஒரு ரூபா பணத்தை வழங்குமாறு சத்தமாக கேட்டுள்ளார். ஒரு ரூபா பணம் இல்லாமையினால் அவர் 2 ரூபா பணம் வழங்கியுள்ளார்.
உரிய இடத்தை வந்தடைந்தவுடன் பயணி மீதி ஒரு ரூபாயை கோரியுள்ளார். எனினும் ஒரு ரூபாய் மீதி பணத்தை கேட்க வெட்கமாக இல்லையா என நடத்துனர் வினவியமையினால் பயணி அவமானமடைந்து சென்றுள்ளார் என கூறப்படுகின்றது.