தீவிர ரசிகரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்திய டோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமிற்கு டோனி தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு உற்சாகமூட்டி வரும் சுதிர் கவுதமிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க டோனி முடிவு செய்தார். அதன்படி தனது பண்ணை வீட்டிற்கு சுதிர் கவுதரை அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது டோனியின் மனைவி சாக்சியும் உடன் இருந்தார்.

இதுகுறித்து சுதிர் கவுதம் தனது டுவிட்டர் பக்கத்தில், கூல் கேப்டன் எம்எஸ் டோனி் மற்றும் அவரது குடும்பத்துடன் மதிய உணவு அருந்தியது சிறப்பான நாளாக அமைந்தது. இந்த நேரத்தை செலவிட்டதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நன்றி, எம்எஸ் டோனி, சாக்சி என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் பாரம்பரிய ரசிகரான இவர், வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கூட இந்திய அணியை உற்சாக மூட்ட கிளம்பி விடுவார். இந்திய அணி விளையாடும் மைதானத்திற்குச் சென்று உடற்முழுவதும் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பார்.

அந்த அளவுக்கு இவர் இந்திய அணியின் தீவிரமான ரசிகர் இவர்.