இடியப்பத்தில் தலைமுடி….

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அண்மையாகவுள்ள சைவ உணவகத்தில் இன்று காலை நபரொருவர் இடியப்ப பார்சல் ஒன்றினை பெற்றுள்ளார். அதனை வீட்டிற்கு சென்று திறந்த சமயத்தில் தலைமுடி காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து  சைவ உணவகத்திற்கு  சென்று  இடியப்ப பார்சலை திறந்து உணவகத்தின் முகாமையாளருக்கு காண்பித்த சமயத்தில் அவர் குறித்த நபரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

உணவகங்களின் பேணப்பட வேண்டிய விதிமுறைகள் இவ் உணவகத்தில் பேணப்படுவதில்லை குறிப்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தலைக்கு உறை அணிவதில்லை, கையால் உணவுகளை கையாளுகின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.