தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம்! பெண்ணின் மோசமான செயல்! பரிதவித்த மகள்

யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் வெற்றிலையுடன் கஞ்சா கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில், விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவது தனது பதின்ம வயது மகளுடன் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனது கணவரைச் சந்திக்கவே அவர் சென்றுள்ளார்.இதன்போது அவர் கொண்டு சென்ற வெற்றிலை சரைக்குள் கஞ்சா இருந்ததை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்தனர்.தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற மகள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.என்ன செய்வது?, யாருடன் வீட்டுக்கு செல்வது என்று தெரியாமல் மகள் தவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.