என் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்: ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நாகர்கோவிலில் இருக்கும் ஏழ்மையான கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறியுள்ள அப்பெண் அது சம்மந்தமான சில புகைப்படங்கள் அடங்கிய சிடிக்களையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.இதனிடையில் புகாரளித்த பெண்ணின் மகளான 19 வயது கல்லூரி மாணவி தனியாக பொலிசில் ஒரு புகாரளித்தார்.

அதில், தன்னுடைய தாயாருக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. இதை மூடி மறைப்பதற்காக என்னை அவருடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க என் தாயார் முயற்சிக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரித்த பொலிசார் மாணவியை அவர் தாயுடன் அனுப்பாமல் உறவுக்கார பெண்ணுடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மீண்டும் காவல் நிலையம் வந்த மாணவியின் தாய் தன் மகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களுடன் கூடிய சி.டி.யையும் இணைத்துக் கொடுத்தார்.

இதை பார்த்து பொலிசார் அதிர்ந்த நிலையில் பல விடயங்களை மாணவியின் தாய் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது மகளுக்கு உறவினர் மகனை திருமணம் செய்ய நினைத்து அவள் சம்மதத்தின் பேரில் நிச்சயம் செய்தேன்.

அப்போது திடீரென அவள் வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.

இதை தொடர்ந்து தான் என் மீது அவள் புகார் கொடுத்து விட்டு உறவுக்கார பெண்ணுடன் சென்றுவிட்டார்.

நான் எனது உறவுக்காரப் பெண்ணை சந்தித்து எனது மகளை என்னிடம் பேச அனுமதி கேட்டேன், ஆனால் அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுமதிக்க மறுத்துவிட்டார்.