மஹிந்தவுக்கு மைத்திரி கொடுத்துள்ள பதவி!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர்களை ஜனாதிபதி தற்காலிகமான நியமித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிமல் சிறிபால டிசில்வா, சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனவிரட்ன மற்றும் அநுர பிரியதர்ஸன யாப்பா ஆகியோர் சுதந்திரக் கட்சியின் தற்காலிக உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.