`படைக்கிறவன் மட்டுமில்ல; பயிரிடுறவனும் கடவுள்தான்’ – அசத்தும் கடைக்குட்டி சிங்கம் டீஸர்!

நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

கடைக்குட்டி சிங்கம்

தீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சாயிஷா, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கத் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.