மோடியைத் தெரியாது என்று கூறிய தொழிலாளிக்கு அடிஉதை: வைரலாகும் வீடியோ

மேற்குவங்கத்தில் பயணிகள் ரயிலில் ஏறிய வெளிமாநிலத் தொழிலாளி ஒருவர் தனக்கு பிரதமரின் பெயர் தெரியாது எனக்கூறியதற்காக அதே ரயிலில் பயணித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்துத் தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து காலியாசாக் பகுதிக்கு செல்வதற்காக இளைஞர் ஒருவர் பயணிகள் ரயிலில் ஏறினார்.

அதே பெட்டியில் மேலும் 4 பேர் ஏறினர். அவர்கள் அந்த வெளிமாநிலத் தொழிலாளி அருகே அமர்ந்தனர்.

அவரிடம் முதலில் மேற்குவங்க முதல்வர் யார் என அந்தக் கும்பல் கேட்க. அவரோ மம்தா பானர்ஜி என சரியாக பதில் சொல்கிறார். அத்துடன் அந்தக் கும்பல் நிறுத்தவில்லை.