இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள்!

இள­வ­ரசர் ஹரிக்கும் ஹொலிவூட் பட தயா­ரிப்­பா­ள­ரான ட்ரெவர் எங்­கல்­செனின் முன்னாள் மனை­வி­யு­மான மேகன் மேர்­க­லுக்கும் இடையில் அண்­மையில் திரு­மணம் இடம்­பெற்­றது.

இருந்­த­போ­திலும் இள­வ­ரசர் ஹரியின் முன்னாள் காத­லிகள் குறித்த சர்ச்­ச­சைகள் இன்னும் தணி­ய­வில்லை.   இவ்­வாறு திரு­ம­ணத்­துக்கு முன்னர் இள­வ­ரசர் ஹரியின் கரத்தைப் பிடித்து சில காலங்கள் வலம்­வந்த பெண்­க­ளைப்­பற்றிப் பார்க்­கலாம்.

caroline  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் caroline1. கரோலின் ப்ளக் (Caroline Flack)

ஹரி காத­லித்த பெண்­களில் பலர் நிகழ்ச்சித் தொகுப்­பா­ளர்­க­ளா­கவும், பாட­கி­க­ளா­கவும், மொடல்­க­ளா­கவும் பணி­பு­ரிந்­த­வர்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­களில் இந்த கரோ­லினும் ஒருவர்.

ஹரிக்கும் அவ­ரது முன்னாள் காத­லி­யான செல்­ஸிக்கும் இடையில் ஏற்­பட்ட மன­மு­றிவின் பின்னர் கரோ­லினின் அழகில் இள­வ­ரசர் ஹரியும் மயங்கித் திரிந்தார்.

அந்­நாட்­களில் நிகழ்ச்சித் தொகுப்­பு­களில் பங்­கு­பற்றி ஓர­ளவு பிர­ப­லத்தை கரோலின் சம்­பா­தித்­தி­ருந்­தாலும் இவர் மிகவும் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளுடன் “டேட்டிங்” செல்­ல­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சில­காலம் ஹரி­யுடன் இவர் தொடர்பில் இருந்தார்.  இவ்­வி­டயம் ஊட­கங்­க­ளுக்கும் பப்­ப­ரா­ஸி­க­ளுக்கும் தென்­ப­டவே இதுவே ஒரு தலை­யி­டி­யாக கரோ­லி­னுக்கு மாறிப் போய்­விட்­டது. பின்னர் இள­வ­ரசர் ஹரிக்கும் கரோ­லி­னுக்கும் இடையில் காணப்­பட்ட பந்தம் முறிந்­து­விட்­டது.

Camilla-hints-at-Prince-Harry-romance  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் Camilla hints at Prince Harry romance2. நட்­டாலி பின்க்ஹாம் (Natalie Pinkham)

நட்­டா­லியும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்­பா­ள­ராவார். இருந்­த­போ­திலும் இள­வ­ரசர் ஹரியால் சில நிமி­டங்கள் பிர­ப­ல­மா­ன­வர்­களில் இவரும்  ஒருவர்.  பிரித்­தா­னி­யாவில் புகழ்­மிக்க சஞ்­சி­கை­களில் ஒன்­றான “சன்” இல் இள­வ­ரசர் ஹரியும் நட்­டா­லியும் இர­வு­நேர விடு­திக்கு வெளியில் நிற்­கின்ற ஒரு புகைப்­படம் வெளி­யி­டப்­பட்­டது. எனினும் இவர்கள் இரு­வ­ருக்­கு­மி­டையில் பின்னர் காதல் மல­ர­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Chelsy-Davy-Prince-Harry-friends  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் Chelsy Davy Prince Harry friends03. செல்ஸி டேவி (Chelsy Davy)

இள­வ­ரசர் ஹரியின் வாழ்வில் ஏற்­பட்ட காதல் தொடர்­பு­களில் உருப்­ப­டி­யான ஒரு காதல் என்றால் அது செல்ஸி டேவிக்கும் அவ­ருக்கும் ஏற்­பட்­ட­துதான். இரு­வரும் சிறு பரா­யத்­தி­லி­ருந்தே நெருக்­க­மாகப் பழ­கி­ய­வர்கள். இவர்கள் இரு­வரும் 2004 ஆம் ஆண்டு காத­லிக்க ஆரம்­பித்­தனர்.

7ஆண்­டுகள் தான் இந்தக் காதல் தொடர்ந்­தது என்­ற­போ­திலும் ஹரி தனது காத­லி­யான செல்ஸி டேவி மீது எக்­கச்­சக்­க­மான அன்பை பொழிந்து தள்­ளினார்.

“ இவள் தான் என் வாழ்வின் அன்பு, இவ­ளையே மணக்க விரும்­பு­கிறேன் ” என்­றெல்லாம் காதல் கோரிக்கை விடுத்தார்.  ஆனால், செல்­ஸியோ ஹரியை மணந்து மகா­ரா­ணி­யாரின் வீட்­டுக்கு வரு­வது குறித்து நிச்­ச­ய­மற்­ற­வ­ரா­கவே இருந்தார்.

அதன்­பின்னர் இள­வ­ரசர் ஹரியின் சகோ­த­ரனை மணந்து கேட் மிடில்டன்  மரு­ம­க­ளாக றோயல் குடும்­பத்­துக்கு காலடி எடுத்து வைப்­பதை தெரிந்­து­கொண்ட அவர் ஹரியின் கோரிக்­கையை ஏற்க மறுத்து காதலைத் துண்­டித்தார்.

Mollie-King  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் Mollie King04. மொல்லி கிங் (Mollie King)

பிரித்­தா­னி­யாவில் பாட­கி­யா­கவும் அதே­வேளை மொட­லா­கவும் வலம் வந்­த­வரே இந்த மொல்­லிகிங். Band the saturdays  எனப்­படும் இசைக்­கு­ழுவில் அங்கம் வகித்து புகழ்­பெற்ற பாட­கி­யாக வலம் வந்­தவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2012 இலி­ருந்து இள­வ­ரசர் ஹரி இவ­ருடன் சில­காலம் விடு­திகள்,  பூங்­காக்கள் உள்­ளிட்ட இடங்­களில் சுற்­றித்­தி­ரிந்தார். அதன்­பின்னர் சில­காலம் இவர்­களை ஜோடி­யாகக் காணக்­கி­டைக்­க­வில்லை.

அட இவ­ரை­யா­வது ஹரி திரு­மணம் முடிப்­பாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கடை­சியில் இது­கு­றித்து  மொல்­லிகிங் தெரி­விக்­கையில் சில­நாட்கள் அவ­ருடன் சுற்றித் திரிந்தேன்.

ஆனால் அதற்­குப்­பின்னர் இந்த உற­வு­மு­றையைத் தொடர எனக்கு விருப்­ப­மில்லை. ஏனென்றால்,  ஓர் இள­வ­ர­ச­ருடன் தொடர்ந்து உறவில் இருப்­பது எனது தகு­திக்கு மிஞ்­சி­யது எனத் தெரி­வித்தார்.

113828  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் 11382805. புளோரன்ஸ் ப்ருடெனெல் புரூஸ் (Florence Brudenell-Bruce)

செல்ஸி டேவி­யுடன் ஏற்­பட்ட முறி­வை­ய­டுத்து புளோரன்ஸ் உடன் மிகவும் நெருக்­க­மாக பழகத் தொடங்­கினார்.  இதுவும் பல­காலம் நீடிக்­க­வில்லை. ஒரு கோடைப் பரு­வத்­துடன் நீடித்த இந்த தொடர்பு அதன்­பின்னர் புஷ்­வா­ண­மா­கி­யது. அதன்­பின்னர் புளோரன்ஸ்,  ஹென்றி எட்வர்ட் எனப்­படும் கோடீஸ்­வ­ரரை திரு­மணம் முடித்தார்.

54cac2f4f547ce3c06e3ace1_image  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் 54cac2f4f547ce3c06e3ace1 image06. க்ரெஸிடா போனஸ் (Cressida Bonas)

க்ரெஸிடா போனஸ் ஒரு நடி­கையும் மொட­லு­மாவார். இவ­ருக்கும் ஹரிக்கும் திரு­மண ஏற்­பா­டுகள் இடம்­பெற்­று­விட்­ட­தாகக் கூட  வதந்­திகள் வெளி­வந்­தன. அவ்­வேளை இள­வ­ரசர் ஹரி­யுடன் இவர் தொடர்பில் இருந்தார்.

இக்­கா­லப்­ப­கு­தி­யில்தான் ஒரு கறை அதுவும் அழிக்­க­மு­டி­யாத ஒரு கறை இள­வ­ரசர் ஹரியால் பிரித்­தா­னிய அரச குடும்­பத்­துக்கு ஏற்­பட்­டது.  இள­வ­ரசர் ஹரியின் முழு நிர்­வாண புகைப்­ப­டங்கள்  பிரித்­தா­னிய அரச வம்­சத்தை களங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இது­கு­றித்து க்ரெஸிடா பெரி­தாக எதுவும் அலட்­டிக்­கொள்­ள­வில்லை.  தனது நடிப்புத் தொழி­லுக்கும் களி­யாட்ட வாழ்க்­கைக்கும் இந்த ரோயல் குடும்­பத்­து­ட­னான உறவு முற்­றுப்­புள்ளி வைத்­து­வி­டுமோ என்று நினைத்து இவர் இள­வ­ரசர் ஹரி­யு­ட­னான பந்­தத்தை முறித்துக் கொண்டார்.

emma-watson-3  இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகள் emma watson 307.  எம்மா வட்சன் (Emma Watson)

இங்­கி­லாந்தின் புகழ்­பூத்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கும் றக்பி விளையாட்டு வீரரான மத்தியூ ஜென்னிக்கும் இடையிலான உறவு முறிவடைந்தது.

இதனை அடுத்து எம்மா தன்னுடன் இசைந்துபோவரா எனப் பரிசோதிப்பதற்கு இளவரசர் ஹரி ஒருமுறை அவரை விருந்தொன்றுக்கு அழைத்துள்ளார். அங்கு தன்னுடன் டேட்டிங் செய்ய வருமாறு இளவரசர் ஹரி கேட்டுள்ளார். ஆனால், அதை எம்மாவட்சன் மறுத்துள்ளார்.  அத்துடன், இளவரசர் எதிர்பார்த்த காதல் மழை தூறல் விட முன்னரே நின்றுபோனது.