இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் எப்பிடி சமைக்க வேண்டும்? போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
இறைச்சியை எப்படி சாப்பிடுவது நல்லது?
இறைச்சி உணவுகளை சாப்பிடும் போது, குழம்பு வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. அப்படி சாப்பிட்டால் இறைச்சியில் உள்ள ஆற்றல் முழுவதும் உடனடியாக நம் உடலில் சேரும்.
கோழிக்கறியை தோலுடன் சமைத்து சாப்பிடுவதே நல்லது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும்.
இது சமைக்கும் போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்து விடும். எனவே கோழியை தோலுடன் சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனை ஏற்படாது.
இறைச்சியை சமைக்கும் போது, குக்கரை பயன்படுத்தாமல், மண் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். இதனால் செரிமானம் எளிதில் நடக்கும்.
இறைச்சியை எப்படி வாங்க வேண்டும்?
எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே நம் உடலுக்கு நன்மை தரும். ஏனெனில் இறந்தவுடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிவிடும்.
எனவே கறி வாங்கும் போது, அது ஃப்ரஷ்ஷானது என்பதை கண்டுபிடிக்க அந்த கறியில் உள்ள ரத்தத்தை வைத்தே எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.
ஆட்டுக்கறி வாங்கும் போது, மென்மையாக உள்ள நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகளை வாங்கி சமைத்து சாப்பிடுவதே நல்லது.