சொல்லவே நா கூசுகின்றது… இதுதான் தமிழனின் கலாச்சாரமா….?
தமிழ் கடவுள் முருகன் உலாவிய வீதியில் விபச்சாரம்……!! தலைகுனியுங்கள் தமிழர்களே..!!!
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான, பழனி முருகனைத் தரிசிக்க, இந்தியாவின் பல் வேறு பகுதியில் இருந்தும், மக்கள் குவிந்து வருகின்றனர்.இதனால், பழனி சிறந்த கோயில் சுற்றுலாத் தலமாக உள்ளது. வருபவர்கள் வந்து தங்குவதற்கென்று, பழனியில் சாதாரணமானது முதல் ஸ்டார் அந்தஸ்து வரையிலான ஹோட்டல்களும் பெருகி விட்டன. புதிது புதிதாக விடுதிகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதனால், இங்கு தங்குபவர்களை போலீசார் சோதனை செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, இங்கு விடுதி நடத்துபவர்கள், வட இந்தியப் பெண்களை வைத்துக் கொண்டு, விபசார தொழில் செய்து வருகின்றனர்.
பலர் இங்குள்ள சுமாரான லாட்ஜ்களை லீசுக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். சீசன் மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, வெளியூர் பயணிகள் வந்து தங்குவது குறைவாக இருக்கும். அதனால், இதற்கென ஒரு நெட் வொர்க் அமைத்து, விபசாரத் தொழில் செய்கின்றனர்.
பழனி பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் பலான தொழில் புரியும் பெண்களும் புரோக்கர்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் தனியாக வந்தால் அவர்களிடம் நைசாகப் பேசி அவர்களே லாட்ஜுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பல காதல் ஜோடிகளும், கள்ளக் காதலர்களும் இங்கு அதிகமாகக் குவிந்து கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில், காதல் ஜோடி தற்கொலையும், விடுதிகளில் நடக்கின்றது .இதனைக் கட்டுப் படுத்து வேண்டும், என்று பக்தர்கள் சபையினர் கூறி வருகின்றனர்.
ஆதாரம் : செய்திப் புனல்