கேரளாவில் நான்காவது முறையாக குழந்தை பிறந்ததால் கேலி கிண்டலுக்கு பயந்து பெற்ற குழந்தையை தேவாயலத்தில் விட்டு சென்ற சம்பவம் அறங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிட்டோ (32) இவருக்கு பிரபிதா (28) என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிரபிதா நான்காவது முறையாக கர்ப்பமாகி பின் குழந்தையை பெற்ரேடுத்துள்ளார்.
பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் நேராக கொச்சி பகுதியில் தேவாயலத்தில் குழந்தையை வைத்துவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து தேவாலயத்தில் இருந்த காவலர் குழந்தை இருப்பதை கண்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையின் பெற்றோரை கைது செய்தனர்.