எஸ் வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை அவரை பாதுகாப்பது யார் என்ற தலைப்பில நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியின் காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. காரணம் அதிமுக சார்பாக வந்த அன்பழகன் என்ற நபர் திடீர் என எஸ்வி சேகர பத்தி எனக்கு தெரியாதா நைட்டு போன் பண்ணி பொண்ணு வேணும் ன்னு கேட்டாரு (5:50 நிமிடத்தில்) எனக் கூறி விவாத அரங்கை அதிர வைத்தார்.
உடனே பாஜக பிரதிநிதி குறிக்கிட்டு மேற்கொண்டு அவரை இது தொடர்பாக பேசவிடாமல் தடுத்தார். நெறியாளரும் தனிப்பட்ட விவகாரங்களை பேசக் கூடாது என அதிமுக பிரதிநிதியை தடுத்து நிறுத்தினார்.
எஸ்வி சேகர் காவல்துறை, பெண்களை பத்தி தப்பா பேசும் போது நான் இத சொல்லக் கூடாதா என அதிமுக பிரமுகர் தொடர்ந்தாலும் நெறியாளர் இது விவாத தலைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் அதை அனுமதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் ஆவேசப்பட்ட பாஜக பிரமுகர் , நீங்க எப்படி இந்த விவாத நிகழ்ச்சிய நடத்தலாம் கேசு கோர்ட்ல இருக்கும் போது, உங்களுக்கு என்ன தெரியும் ஜார்ஜ் சீட் போட்ட பின்னர் கைது செய்யக் கூடாது என்பது சட்டம் எனக் கூறினார்.
உடனே நெறியாளர் மூத்த வழக்கறிஞரை விவாத நிகழ்ச்சிக்கே தொலைபேசி மூலம் அழைத்து பேசினார். மூத்த வழக்கிறிஞர் பாஜக பிரமுகர் சொல்வது போன்று இல்லை. தலைமறைவு என்று தான் ஜார்ஜ் சீட் போட்டிருப்பார்கள் எனவே எஸ்வி சேகரை காவல் துறை நினைத்தால் கைது செய்யலாம் அதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்றார்.
இதற்கிடையில் டிடிவி தினகரன் பிரதிநிதிக்கும் அதிமுக பிரதிநிதிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இவர் அவரை துரோகி என அவர் இவரை துரோகி என மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் நீ பிஜேபி அடிமை என டிடிவி தினகரன் ஆதரவாளர் கூற விவாதம் அனல் பறந்தது.
அதிமுக சார்பாக வந்த நபர், நாங்க இன்னும் எஸ்வி சேகர் தேடிக் கொண்டிருக்கின்றோம் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றே இறுதி வரை கூறி வந்தார்.
உனக்கு பாஜக வ பத்தி பேச என்ன தகுதி இருக்கு என பாஜக பிரதிநிதி கேட்டதும் கோவப்பட்டு டிடிவி ஆதரவாளர் எழுந்த போது பாஜக பிரமுகர் பதிலுக்கு வேட்டிய மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்து டிடிவி தினகரன் ஆதரவாளரை நீ உட்காருய்யா என அதட்டினார். பதிலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளரும் சவுண்டு விட்டார். (15:20 வது நிமிடத்தில்)
கடைசிவரை கேள்விக்கு பதில் தெரியாமலே விவாதம் முடிந்தது. எஸ்வி சேகர் போலிஸார் முன்னிலையில் காரில் ஏறிச் செல்லும் காட்சிகளை ஒளிபரப்பி இந்த விவாதம் நடைபெற்றது.