கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்! 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவிப்பு

பெர்ப்பச்சுவல் ட்றெஸரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுவரை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

அர்ஜுன் அலோசியஸிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இருவரும், அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த அணி ஆகியவற்றைச் சேர்ந்தோர் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என அறிவித்து வருகின்றனர்.

இதற்கமைய, அலோஸியஸிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என நேற்று வரை 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.