ஹொரவபொத்தானை குளத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஹொரவபொத்தானை – மெதவாச்சி சந்தியில் வசித்து வந்த போகுல லியனகே சுமேத பெரேரா (31 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தனது சகோதரரை காணவில்லையென ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30ஆம் திகதி சுதந்த பெரேராவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குளத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சகோதரரை காணவில்லையென முறைப்பாடு செய்த உறவினர்களிடம் காண்பித்து அந்த சடலம் போகுல லியனகே சுமேத பெரேராவினுடையது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தற்பொழுது சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.