யாழ் குடியிருப்பு பகுதிகளில் அரசியல் முக்கியஸ்த்தரின் விடுதி விவகாரத்தால் ஏற்பட்ட நிலை

மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விடுதி மற்றும் உணவகம் அமைக்க தீர்மானித்திருக்கும் காணிக்குள் 20 க்கும் மேற்பட்டோர் பிரதேச மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்கள் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா, இந்த நடவடிக்கைகள் குறித்து, அரசியல் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படும் எனவும், இல்லையெனில் இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக சட்டரீதியன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின பிரத்தியோக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நெளபரின் அழைப்பினை ஏற்று உணவம் மற்றும் விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை, மாவை சோனாதிராஜா பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.